நோக்கம்
“தூய்மையான நகரத்தில் – வளமான வாழ்க்கை”
செயற்பணி
பெருமைமிக்க வரலாற்றின் சிதைக்கப்படாத பாரம்பரியத்தைக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நீர்கொழும்பு நகரின் தனித்துவமான இயற்கை வளங்களை, குடிமக்களின் திருப்தி மற்றும் நல்வாழ்வுக்காக நிலையான முறையில் பயன்படுத்துவதன் மூலமும், அரச கொள்கைகளுக்கு இணங்கி, பல்வேறு மக்கள் குழுக்களுடன் இணக்கமாக நிர்வகிப்பதன் மூலமும், “தூய்மையான நகரத்தில் வளமான வாழ்க்கை”என்ற இலக்கை அடைய அதிகபட்ச பங்களிப்பைச் வழங்குதல்.
இணைய நகர சபை
நீர்கொழும்பு மாநகர சபைக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.இதன் மூலம் இலகுவாக
எமது சேவைகளை உங்களுக்கு பெற்று கொள்ளமுடியும்.இவ்வகையில் வரிபணம் செலுத்துதல்,கேட்போர் கூடம்,நல்லடக்க செய்தல்,கலி பௌசர் சேவைகளை இலகுவாகவும்,பயனுள்ள வகையிலும் உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளவும் முடிவதோடு இணையத்தளத்தினுடாக விண்ணப்பபடிவங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும்.அத்தோடு மாநகர சபை,அதன் சேவைகள் பற்றிய அனைத்து விடயங்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ளவும் முடியும்.மேலும் வீதி விளக்குகள்,திண்ம கழிவுகளை அகற்றுதல்,ஏனைய சுகாதார சேவைகள்,ஏனைய விடயங்கள் பற்றிய முறைபாடுகளையும் செய்வதற்கு முடியுமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.உங்களது யோசனைகளை எமக்கு சமர்ப்பிக்க முடியும் என்பதோடு எமது மாநகர சபையின் அனைத்து விடயங்களையும் இணையவழி மூலம் தெரிந்து கொள்ளவும் முடியுமாகவுள்ளது.
இணையவழி சேவைகளுக்குள் நுழைய ➜➜
ராஜபக்ஷ பூங்கா நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள எழில்மிக்க சுற்று சூழல் அழகுடன் கூடிய இடமாகும்.நீர்கொழும்பு மாநகர சபையினால் நிர்வகிக்கப்படும் இவ்விடம் நடமாடும் சாலை,பூங்கா, உற்சவ நிகழ்வுகளுக்கான புகைபடமெடுப்புக்கள்,சிறுவர் பூங்கா, காட்சி தளங்கள் எனும் பல வசதிகளுடன் கூடிய மிக முக்கியமான இடமாக அமைந்துள்ளது. அமைதியான, மனதை கொள்ளை கொள்ளும் பலவித மரங்கள், மலர்கள் என பல்வகைமையுடன் கூடியதாகவும் உள்ளது. உடலுக்கும் உள்ளத்துக்கும் இதமளிக்கும் இவ்விடம் இயற்கையின் கைவன்மையாக விளங்குகிறது.
