நீர்கொழும்பு மாநகர சபை பிரதி முதல்வர்

திரு. டபிள்யு. ஈ. துலிப் சாமர பர்ணாந்து
பிரதி மாநகர முதல்வர்
சமாதான நீதவான் / குற்றவியல் நீதித்துறை நடுவர்
நான் சாமர பர்ணாந்து - நீர்கொழும்பு மாநகர சபையில் தற்போதைய பிரதி முதல்வராக செயற்படுகின்றேன்.
எனது பிறப்பிடம் மற்றும் வசிப்பிடம் நீர்கொழும்பு என்பதோடு, எனது பாடசாலை கல்வியை மாரிஸ்டெல்லா கல்லூரியில் பெற்றேன். அங்கு செலவிட்ட எனது , இளமை நாட்கள் எனக்கு மிகவும் பயனுள்ள அனுபவங்களை வழங்கியது. எனது வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ந்து, ஆதரவும் உற்சாகமும் வழங்கிய எனது குடும்ப உறுப்பினர்களுக்கும், குடாபாடு மற்றும் பெரியமுல்லை பிரதேச மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனது சேவைக் காலத்தில் கட்டார் எயர்வேஸ் நிருவனத்தில் 24 ஆண்டு கால அனுபவம், சர்வதேச மட்டத்தில் தலைமைத்துவம், முகாமைத்துவம், மற்றும் நிர்வாக திரன்களை மேம்படுத்துவதற்கு சிறந்த வாய்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த அனுபவம் நீர்கொழும்பு நகரத்தை அபிவிருத்தி செய்து சீரமைத்து அதிகபட்ச நன்மைகளுக்கு ஈட்டிச் செல்வதற்கு வாய்ப்பாக அமையும்.
நீர்கொழும்பு நகரம் இலங்கையில் முதன்மையான மீன்பிடி தொழில், சுற்றுலா ஈர்ப்பு மற்றும் வர்த்தக வணிகம் தொடர்பான பிரசித்தி பெற்ற ஒரு மையமாகும். அத்தகைய நகரத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மந்தமாக இருப்பதன் காரணம், பலவீனமான தலமைத்துவம் மற்றும் வள முகாமைத்துவத்தில் குறைபாடுகளின் நிமித்தம் என்பது வருந்தத்தக்கது.
நீர்கொழும்பு மாநகர சபை, குடும்ப நட்பு, நல்லொழுக்கம், சுகாதார ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை சூழல் என நீர்கொழும்பு நகரத்தை கட்டியெழுப்புவது எமது அடிப்படை ஆசை மற்றும் கடமையாகும். அதற்காக நல் ஆட்சியை நிறுவி, நீர்கொழும்பிற்கு கிடைக்க வேண்டிய கௌரவம், புகழ் மற்றும் செழிப்பை மறுப்படியும் ஒழுங்கமைக்க நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.
நன்றி